|
என் சம்பளமும் என் இருதயமும்
தேவன் மோசேக்குச் சொன்னார் நான் இருக்கிறவராக இருக்கிறேன்: என்று {யாத்:3.14} இன்றய காலகட்டத்தில் எல்லோரும் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக் கொள்கிறார்கள்.இதில் சிலரோ நினைக்கின்றனர் தாம் முன்னர் வழிபட்ட தேவதர்களை எப்படியாய் தம் வசப்படுத்தினார்களோ: அதே போல எம் தேவனையும் தம் வசப்படுத்தலாம் என.ஆனால் எம் தேவனோ "மாறாதவர்' அவர் இருக்கிறவராயே எப்பொழுதுமே இருக்கிறார். ஆகவே நாம் தான் எம் சிந்தைகள், கிரிகைகள், நோக்கங்கள், யாவற்றையம் கர்த்தரிடம் ஒப்பபுவித்து அவர் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து, எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.தேவன் ஆபிரகாமிற்குச் சொன்னார்:" நான் உன்னை ஆசீர்வதித்து உன்னை பெருகப்பண்ணுவேன்' என்று.அப்படிய செய்தார்.அவர் பொய்யரைக்க மனிதன் அல்ல.தேவனுடைய சித்தமோ: மனுஷர் தம்முடைய ஆசீர்வாதங்களைப் பெற்று ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது தான், சில வேளைகளில் நாம் கர்த்தரோடு பொருத்தனை செய்தும் மனம் மாறி விடுகிறோம்.ஆனால் தசமபாகமோ அப்படிப்பட்டதல்ல நாம் தேவனேடு பொருத்தனை செய்தாலும் செய்யா விட்டடாலும் சரி தேவனுக்குரியதை நாம் தேவனுக்கே செலுத்த வேண்டும். "கொடுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப் படும்" தேவனிடத்திலிருந்து பரிபூரண ஆசீர்வாதம். தேவனை அறியும் முன்னர் நாம் அந்நிய தேவர்களுக்கு எவ்வளவு காரியங்களை செய்தோம்,அனால் அவற்றால் பிரயோசனம் இல்லை. ஏனெனில் உயிருள்ள தேவன் ஒருவர் மட்டும் தான். தம் பிள்ளைகளாகிய எம்மை சகல ஆசீர்வாதங்களினாலும், ஆசீர்வதிக்கிறார். சிலர் வேலை கிடைத்ததும் முதல் சம்பளம் கர்த்தருக்கு என்பர். அத்தோடு எல்லாம் சரியாகி விடும் என நினைப்பர். வேறு சிலரோ சபைக்க ஒரு பொருள் வாங்கி கொடுத்து விட்டால், தாம் கர்த்தரை தாம் வஞ்சிக்கவில்லை என நினைப்பர். ஆனால் இவை எல்லாமே எம் இதயக் காணிக்கைகள் தான் இதில் ஏதும் பிழையில்லை. ஆயினும் மதலில் நாம் தேவனுக்குக் கொடுக்க வேண்டியது பத்தில் ஒன்று தானே. அது தான் தசமபாகம்.இதை உண்மையாய் செய்வோர் ஆசீர்வாதத்தை காணாமல் போவதில்லை. சிலர் தேவனை வஞ்சிக்கும் போதுதான் தம் பணக் கஷ்டம் பெருகுகிறது என நினையாமல் தம்மை தாமே வஞசிக்கிறனர். மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? {மல் 3:8} நாம் ஏன் தேவனை வஞ்சிக்க வேண்டும்? எவ்வாமே அவருடையதாய் இருக்கும் போது, எமக்கென்று ஏன் ஒழிப்பம் மறைப்பும்? அவர் எம்மை எதிலே வஞசித்தார்? எமக்காய் தம் சொந்தக் குமாரனையே கொடுத்தாரே, இதிலும் பார்க்க இந்தப் பூமியிலேயே வேறு சிறப்பான காரியம் எமக்கு கிடைத்திருக்க முடியுமா? ஆயினும் நாம் எதிலே அவரை வஞ்சிக்கிறோம்."தசமபாகத்திலும் காணிக்கைகளிதும் தானே' {மல் 3:8}." நீ அநேக ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய் நீயோ கடன் வாங்குவதில்லை' {உபா 15:6} இப்பேற்பட்ட வாக்கத்தத்தம் எங்களுக்கு யார் மூலமாயோ கிடைத்திருக்கலாம்: அப்படித்தான் கிடைக்காவிட்டாலும் கூட, அவருடைய வார்த்தையோ, மாறாமல் இருந்து அவரில் நம்பிக்கையாய் உள்ளோர்க்கெல்லாம் பலனளிக்கிறது.அவர் வாக்கு மாறாதவர்.அவரோ பட்சபாதமற்றவர், அவர் தம் வார்த்தையில் சொன்னதை, கடந்து வரச் செய்வார். அவர் முகதாட்சணியம் பண்ணுகிறவர் அல்ல. கர்த்தர் தம் பிள்ளைகளுக்கான ஆசீர்வாதங்களை {உப 28:1-14}வசனம் வரை அட்டவணைப் படுத்தியிருக்கிறார். இவ் ஆசீர்வாதங்களோ தேவ பிள்ளைகளாகிய எங்கள் ஒவ்வொருவருக்குமே உரியது. நாம் வேலை செய்து எம் சம்பளம் கிடைத்ததோ இல்லையோ: எம் மாத வருமானம் எதுவோ அதில் நாம் கர்த்தருக்கு என்று பத்தில் ஒன்றை எடுத்து வைக்க வேண்டும். சிலர் அடிப்படை சம்பளத்தில் கர்த்தரின் பங்கை செலுத்தி பன் மடங்காய் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.ஆனால் இன்னும் சிலரோ தாங்கள் கட்ட வேண்டிய பில்லுகளை எல்லாம் கட்டிவிட்டு: பின்னர் மிஞ்சுவதில் தசமபாகத்தை கணக்கு பார்த்து தெவனை வஞசிக்கின்றனர்.இது இவர்களின் ஆசீவாதத்திற்கு பெரம் தடையாக உள்ளது. தெருவில் விழுந்து தன்னை காயப்படுத்திய பிள்ளைக்கு, காயம் கட்டாமல் விளையாட்டுப் பொருள் வேண்டிக் கொடுப்பது போலத்தான்.தேவனின் வார்த்தையில் சொல்லப்பட்டபடியே, அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து பழகுவோமா. உங்கள் ஆசீர்வாதங்கள் ஏன் தடைப் படுகிறது என்றால்: சாத்தான் உங்கள் சிந்தையை குழப்பி விடுவததால் தான், எப்படி நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால்: நான் கஷ்டப் பட்டு வேலை செய்து தான் பணம் சம்பாதிக்கிறேன்,ஆகவே இது என் பெலத்தில் தானே செய்கிறேன் என அப்படியல்ல:என் தேவனாகிய கர்த்தரே,உனக்கு பெலன் கொடுத்தார் என்பதை மறவாதே:{உபா 8:17,18} ஒர முறை சகோதரன் ஒருவரோடு தசமபாகத்தைப் பற்றி கதைத்தேன், அப்பொழுது அவர் சொன்னார்,கர்த்தர் நல்ல தொரு வேலையை தந்து ஆசீர்வதிக்கட்டும் பின்னர் நான் தசம பாகம் கொடுக்கிறேன் என, எனினும் அந்த சகோதரனுக்கு கர்த்தர் நல்ல வேலையை கொடுக்கும் படிக்கு அவரோடு சேர்ச்து ஜெபித்தேன்.அதே போலவே கர்த்தரும் நல்லதோர் வேலையை நல்ல சம்பளத்தோடே கொடத்தார்.ஆயினும் அந்த சகோதரனோ அதன் பின்னர் அந்தக் கதையே இல்லை, இப்படியாய் அநேகர் இந் நாட்களில் வேலைக்கும், விசாவிற்கும் வீட்டிற்குமாய், கர்த்தரை தேடுகின்றனர்.ஆனால் நாம் முதலில் கர்த்தரைத் தேடுகிறவர்களாய் இருக்கும் போது: எம் தேவைகளை அவர் நிறை வேற்றாரோ? எம் காரியங்கள் எல்லாமுமே கர்த்தரின் முன்பதாய் வெளியரங்கமாய் இருக்கிறது.
தொடரும்............ B.Yoges, St Gallen-Switzerland |
NLM 2008