|
பொன் கட்டளைகள் பதினான்கு
1. ஒரே நேரத்தில் இருவரும் கோபித்தல் ஆகாது. 2. வீட்டில் நெருப்பு பிடித்தாலே தவிர ஒருவரோடொருவர் சத்தமிட்டுப் பேசவேண்டியது அவசியமில்லை. 3. உங்கள் விவாதத்தின் போது,இருவரில் ஒருவர் ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு விவாதிப்பின்,ஜெயிப்பவர் உங்கள் பகுதியாளராக இருக்கட்டும். 4. அன்புடன் குற்றம் உணர்த்தப்படின் குற்றம் காண்பது பிழையல்ல. 5. பழைய காலத்து தவறுகளை, திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தினால் குடும்பம் பலவீனப்ட்டு சீர்குலைய அது வழிகோலும். 6. தவறு செய்பவர், தவறை உணர்ந்து மன்னிப்புக்கோர முன்வருதல், குடும்பம் சீர்ப்பட முதல் படியாகும். 7. பிரச்சனைகளைத் தீர்வு காணாமல் கோபத்தோடு படுக்கைக்குச் செல்லின் கல்லறைக்கு கல்லு வைப்பது போலத்தான், {அதாவது கல்லறையோ பத்திரமானது,ஆயினும் உள்ளே இருப்பது பிணம் தான் } 8. நான் உங்களில் அன்பு செலுத்துகிறேன் என, உங்கள் பகுதியாளருக்கு நீங்கள் சொல்வதோடு, உண்மையாய் கருதுவீர்களாயின்,கட்டிய வீட்டை அழகுபடுத்துவது போன்ற ஒருமன இன்ப ஊற்ற, ஆறு போல பெருக்கெடுக்கும். 9. உங்கள் வாழ்வில் முதலிடம் பெற்று உங்கள் இருதயத்தில் உன்னத ஸ்தாபனத்தை உங்கள் பகுதியாளர் வகிப்பாராயின், உங்கள் எதிர்காலம் கழுகைப் போன்ற வலுவைப் பெற்றிடும். 10. உங்கள் பகுதியாளர் எதிர் பாராத வேளையில்,அவவை அல்லது அவரை மகிழ்விக்கும்படி பரிசளித்து ஆச்சியப்படுத்துங்கள், மகிழ்ச்சியை பெறுவதும்,கொடுப்பதும் அணையாவிளக்கின் முத்திரை. 11. முழு உலகத்தையே மறந்துவிடினும், ஒருவரையொருவர் தவிர்க்கலாகாது,அப்படித் தவிர்ப்பின், தவிர்க்கப்பட வேண்டியவை, உங்களுக்குள் தவிப்பை உண்டு பண்ணும். 12. உங்கள் திருமணத்திற்கு வெளியேயும் நண்பர்கள் இருப்பது அவசியம், அதிலும் நல்ல நண்பர்கள்உங்கள் வாழ்க்கையில் பெலன் அளிப்பார்கள். 13. உங்கள் பகுதியாளருக்கு கொடுக்கப்படாத அக்கறையம்,நேரமும் இன்னொரு இடத்தில் செலவழிக்கப்படின், ஏதேன் தோட்டத்தில் நுழைந்த சர்ப்பம் போலத்தான். 14. முத்துக்களை இறுக்கமாய் பின்னின் மாலை அறுந்து விடும், பலன் தரும்படி ஒருவரையொருவர் விடுதலை செய்யின், முத்து மாலை பயனுள்ளதாய் காலம் பூராவும் பயன்படும். |
NLM 2007