|
தேசத்தின் கட்டுமானப் பணிக்கு கீழ்க்காணும் வெற்றிடங்களுக்கு ஆட்கள் தேவை !
1. திறப்பின் வாசலில் நிற்கவும் சுவரை அடைக்கவும் எசேக்கியல்கள் தேவை. {ஏசே 22.30} 2. தேசத்தின் பாவத்தை அறிக்கை செய்து உபவாசித்து விண்ணப்பிக்க தானியேல்கள் தேவை {தானி 9:18-20} 3. சுட்டெரித்து போடப்படும் மண் மேடுகளான கற்களுக்கு உயிர்கொடுத்து, தேசத்தின் அலங்கத்தை திரும்பவும் கட்ட தைரியமும் உறுதியும் உள்ள நெகேமியாக்கள் தேவை. { நெகெ 4:2} 4. அவர்கள் பாவத்தை மன்னித்தருளும், இல்லாவிட்டால் என் பேரைக் கிறுக்கிப்போடும் என்று தன்னை அர்ப்பணிக்கிற மோசேக்கள் தேவை. { யாத் 32:32} 5. விக்கிரகங்களால் நிறைந்த பட்டணங்களைச் சந்திக்க ஆவியில் வைராக்கியம் நிறைந்த பவுல்கள் தேவை. { அப் 17:16} 6. ஆ!என் தலை தண்ணீர்ம் என் கண்கள் கண்ணீருற்றுமானால் நலமாயிருக்கும் என்று என் ஜனமாகிய குமாரத்தியின் நிமித்தம் இரவும் பகலும் பெரு மூச்சு விட்டு அழுது புலம்புகிற எரேமியாக்கள் தேவை. { எரே 9:1} 7. என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் கட்டளையிட்ப்படுவதாக என்று கெஞசி நிற்கற எஸ்தர்கள் தேவை { எஸ் 7:3} 8. தன் ஜனத்தாருடைய இரட்சிப்புக்காக தன் ஜெபங்களில் எப்பொழுதும் போராடுகிற எப்பாப்பிராக்கள் தேவை. { கொலோ 4:12} எழுந்து கட்டுவோம் வாருங்கள் ! { நெகே 2:18} கர்த்தர் சொல்லுகிறார்!" என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி,ஜெபம் பண்ணி, என் முகத்தைதேடி,தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால்,அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு சேஷமத்தைக் கொடுப்பேன். {11 நாளா 7:14} |
NLM 2007