|
ஆயிரக்கணக்கான ஐனங்கள் பெற்ற அற்புதங்கள்,அதிகமான அதிசயங்கள் ஏன் உங்கள் வாழ்விலும் நடை பெறக்கூடாது? நாங்கள் அறிந்தும் அறியாமலும் எங்களுடைய சந்ததிகளுக் கூடாக நான்கு அல்லது பத்து தலைமுறைகளாக கடத்தப்படும் சாபங்களை எமது ஜீவியங்களில் சுமக்கிறோம். வேதஅடிப்படை உண்மையின் படி இச் சாபங்களில் இருந்து 100வீதம் எம்மாலே விடுதலை பெற்று ஆசீர்வாதத்திலே ஜீவிக்க முடியும். குறிப்பாக:-குடும்பங்களில் போராட்டங்கள்,குழப்பங்கள்,பயங்கள், அமைதியின்மை,இருதய உள்ளான காயங்கள், நேர்த்திகளின் விளைவுகள், சமாதானமின்மை,சந்தோசத்தை குலைக்கும் அனேக பழைய நினைவுகள்,இதன் விளைவுகள் ஆகும். இப்பேற்பட்ட துன்பங்கள் வேதனைகள் இருதயக் காயங்களினால் ஏற்பட்ட கசப்புகள் விரக்திகள்,விடமுடியாத மனக் காயங்கள் இதன் விளைவுகள் கோபம்,பழிக்குப் பழி வாங்குதல் இப்பேற் பட்ட தீமைகளுக்கு விளைவுகளாகிறது. ஒரு மனிதன் எமக்கு விரோதமாக தீமை செய்யும் பொழுது அவனுக்கு விரோதமாக எழும்பாமல், அவனை மன்னிப்பதன் மூலம் நாம் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள முடியும்.எப்படி எனில் ஒரு பந்தை மேலே எறியும் பொழுது அது மீண்டும் கீழ் நோக்கி வருகின்றதோ,அதே போல் அந்த மனிதனை ஆசீர்வதிப்பதன் மூலம் நாமும் எங்களுடைய ஜீவியங்களில் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே மேற் குறிப்பிட்ட காரியங்களை நாம் நன்றாக விளங்கிக் கொண்டு இதில் பூரண விடுதலையைபெறும்படி குறிப்பான ஜெப அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.நாம் விசுவாசத்தோடு ஜெப விண்ணப்பத்தினுடாக 60 நாட்களுக்கு தொடர்ந்து ஜெபிக்கும் பொழுது தேவ ஆசீர்வாதங்களையும், விடுதலையையும் பெற்றுக்கொள்ளுவோம். இவ்ஜெபத்தினுடாக நீங்கள் பெற்ற சாட்சிகள்,அனுபவங்களை எங்களுக்கு அறியத் தரவும். NLM2008 |