|
பரிசேயரும் சதுசேயரும்
சதுசேயர் என்றும் பரிசேயர் என்றும் இரண்டு பிரிவினர்களை வேதத்தில் காண்கிறோம். இவர்களைப் பற்றிய சில குறிப்புக்கள். பரிசேயர்: பரிசேயர்களென்றால் பிரிந்தவர்கள் என்று கருத்து இவர்கள் மோசேயின் நியாயப் பிரமாணத்தைக் கைக்கொள்வதில் மிகவும் அக்கறையுடையவர்கள். மார்க்க வைராக்கியம் உள்ளவர்கள்.காலப்போக்கில் வெறும் கொள்கைகளைக் கடைப்படிப்பதில் மாத்திரமே கவனஞ் செலுத்தினார்களே தவிர தேவனை முழுமனத்துடனே தேடுகிறவர்களாயிருக்கவில்லை. நியாயப்பிரமாணத்துடனே தமது சுயபோதனைகளையும் போதிப்பவர்கள் குளித்தல், கை கால் கழுவுதல், பாத்திரங்களைச் சுத்தமாக்குதல்,ஓய்வு நாளை மிகவும் கவனமாகக் கைக்கொள்ளுதல் போன்றவற்றில் அதிக கவனஞ் செலுத்தி இருதய சுத்தத்தை மறந்தவர்கள்.( மத் 23: 26 ) பாவ விமோசனம் கிரிகையினாலும் சுய நீதியினாலும் (மத் 5 : 20 ) கிடைக்கும் என போதித்தனர். இவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பலனை மறுதலிக்கிறவர்களாயே இருந்தனர். பரிசேயர்- P H A R I S E E P - Proud - பெருமையுடையவர்கள் H - Hypocrites - வேஷதாரிகள் A - Arrogant - ஆணவக்காரர்கள் R - Religious - மதப்பற்றுடையவர்கள் I - Insulting - நிந்திக்கிறவர்கள் S - Self righteous - சுயநீதிக்காரர்கள் E - Evil muderers - தீயகொலைபாதகர்கள் E - Eye pleasers - பார்வைக்கு நல்லவர்கள்
சதுசேயர் சதுசேயர் பரிசேயருக்கு எதிரான அணியினர். தாவீதின் காலத்தில் பிரதான ஆசாரியனாயிருந்த சாதோக்கு என்பவனுடைய பெயரிலிருந்தே சதுசேயர் என்ற பெயர் வந்தது. அவர்கள் சாதோக்கின் பரம்பரயை சேந்தவர்கள்.இவர்கள் ஆசாரிய ஊழியம் செய்கிறவர்கள். பிரதான ஆசாரியர்களில் அதிகமானோர் சதுசேயராயே இருந்தனர். இவர்கள் உண்மையா ஊழியத்தில் ஆரம்பித்தவர்கள். பின்பு தம் மகிமைக்காக பாடுபடுகிறவர்களாய் மாறினார்கள். இவர்கள் உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிறவர்கள். (மாற்11:18) .தேவதூதர்களுமில்லை,ஆவியென்று ஒன்றுமில்லை என நம்புகிறவர்கள். (அப் 23: 8 ). இவர்கள் நல்ல அந்தஸ்தும் ஜசுவரியமும் உள்ளவர்கள்.
|