|
ஒருஅன்பரின் மடல் அன்புள்ள என் உயிரின் உயிர்----------அறிவது,எப்படி சுகம்? நேற்றய தினம் நான் உன்னை எதிர் பார்த்து, நீவருவாய் என்று காத்திருக்கும் போது, நீ உன் நண்பர்களுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டு, என்னை கடந்து செல்வதைக் கண்டேன். நீ வந்து என்னுடன் பேசுவாய் என்றும் நான் உன்னுடன் சற்று உலாவலாம் என்று எதிர்பார்த்து நின்றேன்.ஆனால் நீயோ என்னைக் காணவில்லை. நாள் முழுவதும் நீ பல வேலைகளைச் செய்து களைத்திருந்ததால், நீ இளைப்பாறும் படியாக சூரியனை மறையச் செய்து சந்திரனை எழுப்பி விட்டேன்.நீயோ என்னிடம் பேசாமலும் என்னை நினையாமலும் உறங்கி விட்டாய். நீ நித்திரை பண்ணும் போது உன் அழகைப் பார்ப்பதற்காக விடியும் வரை உன் அருகே உட்கார்ந்து, அந்த நிலவின் வெளிச்சத்தில் உன் கரங்களை பிடித்திருந்தேன். மறுநாள் காலையில் உன்னுடன் பேசுவதற்காக நீ விழிக்கும்வரை காத்திருந்தேன். நீயோ பல காரியங்களைச் செய்ததால் என்னுடன் பேசமுடியவில்லை. உன்னிடம் எனது நேசம் அதிகமாக இருந்ததால் நீ வெளியே செல்லும் போது உனக்குப் பாதுகாப்பாய் உன் கரத்தை பிடித்துக்கொண்டேன். ஆனால் நீ அதை விடுவித்து சிறு பிள்ளையைப் போல் அங்கும் இங்கும் ஓடித் திரிந்து உன்னைக் காயப்படுத்திக்கொண்டாய். ஒருவரும் உனக்கு உதவவில்லை. அதை நான் கண்டபோது என் மனம் கலங்கியது.. உடனே நான் ஓடி வந்து உனக்கு காயம் கட்டி,உன்னை ஆறுதல்படுத்தி, உன்னை என் மார்பில் அணைத்துக் கொண்டேன். நீ என் கரங்களை பிடித்திருந்தாயே ஆனால் இது உனக்கு நேரிட்டிருக்காது. இப்பொழுதும் உன்மேல் உள்ள என் அன்பு குறையவில்லை உன்னிடம் இருந்து எனக்கு வேண்டியதெல்லாம் உன் அன்பும், உன் இருதயமும் தான். இப்பொழுதும் உன்னுடன் பேசவும், உனக்கு உதவவும், உனக்கு ஆலோசனை சொல்லவும், உன்னுடைய தப்பிதங்களை மன்னிக்கவும் நான் காத்திருக்கிறேன். எப்பொழுது என்னிடம் வருவாய்? எப்பொழுது என்னோடு பேசுவாய்? என்று எதிர்பார்த்திருக்கிறேன் இப்படிக்கு உனக்காக மரித்து உயிர்த்த இயேசு
|
NLM 2008