|
விரல்களின் அடையாளங்கள்
பெரு விரல்: இது உற்களிற்கு அருகில் உள்ள விரல் ஆகும். ஃ உங்களிற்கு நெருக்கமானவர்களுக்காக முதலில் ஜெபியுங்கள். அவர்கள் தான் அடிக்கடி உங்கள் ஞாபகத்திற்கு வரக்கூடியவர்கள். தமது அன்பானவர்களுக்கு ஜெபிப்பது இனிமையான கடமையாகும். ஆள்காட்டிவிரல்: இது ஒன்றை சுட்டிக் காட்டுவதற்கு பயன் படுத்தப்படும்.விரல் ஆகும், எனவே உங்களை வழிநடத்தும் உங்கள் போதகர், அப்போஸ்தலர்கள் ஊழியர்கள், உங்களை போதித்து வழிநடத்தும் அனைவருக்காகவும், ஜெபியுங்கள். மற்றவர்களை சரியான பாதையிலே வழிநடத்தும் அவர்களுக்கு மிகுந்த ஞானம் தேவையாகும். எனவே அவர்களை உங்கள்ஜெபத்தில் நினைவு கூற மறக்காதீர்கள். நடு விரல்: இது உயரமான விரல் ஆகும்.இது தலைமைத்துவத்தை ஞாபகப்படுத்துகிறது. எமது தேசத்தின் தலைவர்கள், அரச அதிகாரிகள் ஆகியவர்களுக்கு ஜெபிக்க வேண்டும். மோதிரவிரல் : ஒரு இசைக் கலைஞ்சனிடம் கேட்டால் விரல்களில் பெலவீனபான விரலே இவ் விரல் என ஒத்துக்கொள்வான். இது வேதனையின் உச்சியில் வாழ்பவதுகள், துன்பம், துயரம், கண்ணீர் கவலை எனப் பல போராட்டங்ககோடு வாழ்பவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.வியாதியஸ்தர்களுக்காய் ஊக்கமாய் ஜெபியுங்கள். சுண்டுவிரல்: இது கடைசி விரலாகும். மறடறவர்களுக்காக ஜெபிக்கும் நாம் நமது தேவைகளுக்காக கடைசியாக ஜெபிப்பது ஏற்றகாரியமாகும். இப்படியாக மற்றவர்களுக்காக ஜெபிக்க தொடங்கும் போது நாம் சுயநலமற்றவர்களாகவும், ஜெபிக்க கற்று கெர்ள்வதோடு தேவனுடைய ஆசீர்வாதங்களையும் பெற முடியும். |
NLM 2007