பிள்ளைகள் எப்படி வளர்க்கப்படுகிறார்களோ,

அப்படியே வாழக் கற்றுக்கொள்கிறார்கள்.

 

 

1.பரியாசத்துடன் வளர்க்கப்படும் பிள்ளை பயந்த சுபாவத்துடன் வாழக் கற்றுக் கொள்கிறது.

2.குறை கூறி வளர்க்கப்படும் பிள்ளை குற்றச்சாட்டுடன் வாழக் கற்றுக் கொள்கிறது.

3.அவநம்பிக்கையுடன் வளர்க்கப்படும் பிள்ளை ஏமாற்றத்தில் வாழக் கற்றுக் கொள்கிறது.

4.விரோதத்துடன் வளர்க்கப்படும் பிள்ளை  பகையுடன் வாழக் கற்றுக் கொள்கிறது.

5.பிரியத்துடன் வளர்க்கப்படும் பிள்ளை  அன்புடன் வாழக் கற்றுக் கொள்கிறது.

6.உற்சாகத்துடன் வளர்க்கப்படும் பிள்ளை  நம்பிக்கையுடன் வாழக் கற்றுக் கொள்கிறது.

7.உண்மையில் வளர்க்கப்படும் பிள்ளை  நீதியைக் கற்றுக் கொள்கிறது.

8.பகிர்ந்துகொள்ளுதலில் வளர்க்கப்படும் பிள்ளை  சிந்திக்க கற்றுக் கொள்கிறது.

9.அறிவில் வளர்க்கப்படும் பிள்ளை ஞானத்தைக் கற்றுக் கொள்கிறது.

10.பொறுமையில் வளர்க்கப்படும் பிள்ளை  சகிப்புத்தன்மையை கற்றுக் கொள்கிறது.

11.மகிழ்ச்சியுடன் வளர்க்கப்படும் பிள்ளை அன்பாகவும்,அழகாகவும் வாழக் கற்றுக் கொள்கிறது.

 

NLM2008