ஒரு மனிதன் தன்னுடைய சரீர  உறுப்புக்களை உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய தயங்குகிறான்.காரணம் தன்னுடைய உயிருக்கு எதாவது நடந்துவிடும் என்று.அப்படி இருந்தும் ஒருவன் தானம் செய்ய முன் வருவதாயின் இரண்டு காரணங்கள் இருக்கும். ஒன்றில் பணம் கிடைக்கும்,அல்லது புகழ் கிடைக்கும்.

எமக்கு தெரிந்தது உயிருடன் இருக்கம் ஒருவர் கண்,இரத்தம்,சீறுநீரகத்தில் ஒன்று கணையம்,ஈரல் என சில குறிப்பிட் பகுதிகளை மட்மே ஒருவர் தானமாக கொடுக்க முடியும்.மரித்த மனிதனால் தான்  கல்லீரல், நுரையீரல்.குடல் என இன்னும் கூடுதலான பகுதிகளை தானம் செய்ய முடியும்.

ஒருவர் தன்னுடைய உறுப்புக்களை தானம் செய்ய முன்வந்தாலும், மருத்துவ ரீதியாக அவர் ஆரோக்கியமானவராகவும் எந்தவித தொற்று நோய்கள் அற்றவராகவும் இருக்க வேண்டும்.ஏனெனில் அப்பொழுது தான் அவருடைய உறுப்புக்களை மற்றவர்களுக்கு உபயோகிக்க முடியும்.

ஒருவர் வெளித்தோற்றத்திற்கு எந்த விதமான நோய் அற்றவராக இருக்கலாம்.ஆனால் அவருடைய ஆத்துமாவில் ஏற்பட்ட பாவம் என்ற நோய்க்கு,எந்த ஒரு தானத்தை செய்தாலும் அதை ஈடு செய்ய முடியாது. தன்னடைய பாவத்தை போக்குவதற்காக சரீரத்தில் ஒரு உறுப்பையோ,அல்லது மிருகங்கள், பறவைகளை பலியிடுவதன் மூலமோ பரிகாரத்தை செய்யது விட முடியாது.

ஆனால் மனிதர்களின் பாவங்களிற்பாய் இயேசுகிறிஸ்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமது முப்பத்தி மூன்றாவது வயதில் ஆரோக்கியமான நிலையில் சிலுவையில் உயிரோடே தமது சரீரம் முழுவதையம் ஒப்பக் கொடுத்தார்.கைகளில், கால்களில் ஆணிகளால் அடிக்கப்பட்டு இரத்தம் சிந்தி மரித்ததன் மூலம் ஒவ்வொருவருடைய பாவத்தை கழுவினார். மூன்றாவது நாள் உயிர்த் தெழுந்து எங்களை தம்மடைய பிள்ளைகள் ஆக்கினார்.

எனவே எமது சரீரத்தையும். ஆத்துமாவையும் இயேசுகிறிஸ்துவின் விலையெறப் பெற்ற இரத்தத்தால் கழுவி பரிசுத்தமாக்கி நாமும் அவருடைய பிள்ளைகள் ஆவோம்.

 

NLM-TV.COM

NLM2008