|
ஜெனி அம்மாவிற்கு இனிய வாழ்த்துக்கள்:
எம்மினத்தின் இருளகற்ற தியாகமான சிறு மெழுகுவர்த்தியாம் நடுக்கடலில் தத்தளிக்கும் படகான எம்மவர்க்கு,நல்ல கடற்கரை விளக்காய் வாழ வழி தெரியாது வழி தப்பிய ஆத்துமாக்களின் நல்ல திசை காட்டியாய் அக்கிரமம் சுட்டெரிக்கும் சூரியப் புதல்வியாம் ஜெனியம்மா உங்களின் பணி இடையூறு எதுவுமின்றி இன்பமாய் தொடர்ந்திட,இறை மகனாம் இயேசு சுவாமியிடம் இறைஞ்சுகிறோம்.
கரன் அக்காவிற்கு இனிய வாழ்த்துக்கள்:
நாடு. மொழி நிறத்தால் வேறுபட்டாலும் இயேசு அப்பாவிற்குள் இதயத்தால் இணைந்திட்ட எம் கரன் அக்காவே! தியாக தீபமே, திகட்டாத பேரின்பமே சிறு புன் சிரிப்பால் எல்லோரையும் நேசிக்கும் நெஞ்சமே! தத்தளிக்கும் எம்மினத்தின் விடிவிற்காய் உங்களையே மெழுகாக்கி செய்திட்ட தியாகத்திற்கு,தலை வணங்ககிறோம். தேவன் பாதம் பணிகிறோம். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உறுதியும், தேவ கிருபையும் என்றென்றும் இருக்கும் படி ஆண்டவர் ஆசீர்வதிப்பார்.
N.L.M. Burgdorf: Zwitzerland
கிறிஸ்துவிற்குள்ளான, அன்பு பெற்றேருக்கு, ஒரு கடிதம்!
எமது தாயாய், எமது சகோதரியாய், உங்களிருவரையும்{ஜெனி,கரன்}ஆசீர்வதித்தே,பல கோடியாய் உங்கள் வாசஸ்தலம் கிறிஸ்துவின் அன்பினாலும், ஆசியினாலும் பெருகிட இன்றும், உங்களை உங்கள் பிள்ளைகள் ஆசீர்வதிக்கவே! பல இன்னல்களிலும், பல பயங்கரங்கரத்தின் நடுவிலும், உங்களை அழைத்தவருக்கு உண்மையாய்,அன்றிலிருந்து இன்று வரை நல்லதோர்,பவுலைப்போல்,ஒப்புக்கொடுத்திரே, உங்கள் தியாகங்கள் மூலம் எங்களை கிறிஸ்துவிற்குள்ளாய் பெற்றெடுத்ததீர்களே: நித்திய ஜீவனின் பாதையின வழியையும் காட்டினீர்களே. உங்களை இப்புதிய வருடத்திலும், பிலிப் 4.19 ன்படி வாழ்க!வாழ்க!என வாழ்த்துகிறோம்!!! அன்புடன் சுந்தரம்,கோமளா Zurich,Zwitzerland
பிரியமான சகோதரன் தேவா, சகோதரி அனோமாவிற்கு! இயேசுவின் இனிய நாமத்தில் ஆசீவதிக்கிறோம்.உங்கள் உழியங்கள் மூலம் நாங்கள் அனேக நன்மைகளைப் பெற்றள்ளோம்.குறிப்பாக தொலைக்காட்சி ஊழியங்கள் மிகவும் பயனுள்ளதாய் உள்ளது.நீங்கள் தரும் குடும்ப ஆலோசனைகள்,பிள்ளை வளர்ப்பு முறைகள் என பல காரியங்கள் கிறிஸ்துவிற்குள்ளாய் எம்மை முன்னோக்கச் செய்கிறது.இயேசு கிறிஸ்துதாமே உங்கள் ஊழியங்களை பன்மடங்காய் ஆசீர்வதிப்பாராக!!!
என்.எல்.எம் சபை விசுவாசி
எமது கிறிஸ்துவிற்குள்ளான, அன்பு பெற்றேருக்கு! கிறிஸ்துவிற்குள்ளாக உங்களை அசீர்வதிக்கிறோம்.உங்கள் ஊழியங்களினுடாய் இன்று அனேகர் இரட்சிப்பின் பாதையில் வழி நடத்தப்பட்டிருக்கிறதை எங்கள் கண்கள் கண்டது.பல தேசங்களிலும் சபைகளை உருவாக்குவதற்கு, கர்த்தர் உங்களை அழைத்துச் சென்றுள்ளார்.விசேடமாக இலங்கையில் நீங்கள் செய்து வரும் ஊழியங்களிற்காயும்{பாலம் சபை,சிறுவர் இல்லம்,விதவைகள் ஊழியம்} உங்களை கனப்படுத்துகிறோம்.கர்த்தரின் கரம் உங்களோடு என்றும் இருக்கும் படி கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஆசீர்வதிக்கிறோம். கிறிஸ்துவிற்குள் அன்பு மகள் S.Serena, Switzerland
|
NLM 2008