நானுமா இரட்சிக்கப்பட்டேன்?

 

எனது மனைவி 90ஆம் ஆண்டு இரட்சிக்கப்பட்டு, சபைக்குப்போக ஆரம்பித்தார்.எனக்கோ இதில் நாட்டமில்லை.இது பற்றி என் நண்பர்களும் பலதைச்சொல்லி என்னைக் குழப்பினார்கள்.பல கிறிஸ்தவர்கள் வந்து சத்தியம் சொன்னார்கள் எனக்கோ  கசப்புத்தான் அதிகரித்தது.முடிவில் ஒரு வருடமாய் சபைக்குப் போய்க்கொண்டிருந்த என் மனைவியையும்   போகவிடாமல் மறித்துவிட்டேன். பல செலவில் என் வழிபாடுகளிற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். மனைவியையும் மனந்திரும்ப வைக்கவேண்டும் என்றெண்ணி என் வழிபாடுகளை கூட்டினேன்.வீட்டையே கோயிலாக மாற்றினேன். காசு பணம் நிறைய இருந்தது.நண்பர்கள் பலர் யாரவது காசு கேட்டுவந்தால் உடனே தூக்கிகொடுக்க வசதி அதிகம்.பலருக்கு வட்டிக்கும் எடுத்துக்கொடுத்தேன்.இதனால் நட்பு அதிகம். நண்பர்கள் நடக்கவிடமாட்டார்கள்.உடனே கார்தான் வரும்,அதிக சீட்டுக்களைப் போட ஆரம்பித்தேன்.திடீர் என சீட்டுக்கள் எல்லாமுமே சிக்கலாக மாறியது.பல ஏமாற்றம்,தோல்வி படிப்படியாக துன்பம் ஆரம்பித்தது.தொகை,தொகையாகப் பல கடன்கள் உண்டானது.பலர் கதவை தட்டத்தொடங்கினார்கள்.இரவு,பகல் என்று பாராமல் கடன்கேட்டு வருவார்கள்,போதாதிற்கு தொலைபேசி மூலம் தொல்லை தரத்தொடங்கினார்கள்.நித்திரையே இல்லாமல்போயிற்று.சந்தோசமாய் கடன் வாங்கியவர்கள்கூட,என் நிலையைக்கண்டு ஓதுங்கினார்கள்.

நெருக்கடி அதிகமானதால்,வேறுவழியின்றி தற்தொலை செய்வதே நலம் என எண்ணினேன்.முதலில் மனைவியை கொலைசெய்து விட்டுப் பின் நானும் தற்கொலை செய்வதாக தீர்மானித்தேன்.இதற்காக மூன்று இரவுகள் கண்விழித்திருந்து முயற்சி செய்தேன்.முடியவில்லை.என் மனைவியோ மறைமுகமாக ஒரு வேதத்தை வைத்து வாசித்து வந்தார்,முன்பு பல தடவை அதை எரிப்பேனென நான் கத்தியதால்,அதை மறைமுகமாகவே வைத்து வாசித்து எம் குடும்ப விடிவுக்காக ஜெபித்து வந்தார்.

யாரும் சுவிசேசம் அறிவிக்க எனது வீட்டுப்பக்கம் வருவதில்லை, காரணம் நான் அவர்களை மதிப்பதில்லை,இப்போ சோர்வும் வேதனையும் அதிகமானதால்படுக்கையிலிருந்தபடியே "கடவுள் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்" எனச் சத்தமாகச் சொன்னேன்.உடனே "அழைப்புமணி" அடித்தது மூன்றுபேர் வாசலில் நின்று கொண்டிருந்தனர்.இயேசு என்ற சொல்லை சொன்னாலே சினந்து வெருட்டிக்கலைக்கும் என்னால், அவர்களை கலைக்கமுடியவில்லை.உள்ளே வரச்சொன்னேன்.அவர்கள் சொன்ன வார்த்தைகள் என்னைச் சமாதானப்படுத்தியது.அவர்கள் போகும்போது உங்களை உண்மையுள்ள ஆண்டவர்தான் அனுப்பினார் எனச்சொன்னேன். அதே கிழமை குடும்பமாய் சபைக்பகுப் போனோம்.அதுவே எம் விடுதலையின் நாள்.சகல வியாதிகளும் குழப்பங்களும் நீங்கியது.

எம் வாழ்வின் மாற்றத்தைக் கண்ட பலர் அதிசயித்தனர்,இதுவரையும் நாம் காணாத சந்தோசம், சமானத்தை பெற்றுள்ளோம். சகல போராட்டங்கயளும் அற்புதமாய் நீங்கிக்கொண்டிருக்கிறது.குறைந்த வாடகையில் நல்ல வீடு கிடைத்தது,நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது, அற்புதமாய் ஒரு மகனையும் தேவன் கொடுத்தார்.அவருக்கே மகிமை உண்டாவதாக! ஆமென்!!

 

துரை,சாந்தா,போவாஸ்

லவுசான்,சுவிஸ்.

NLM