கர்த்தரின் கொடை

 

நாம் சுவிஸ்லாந்தில் உள்ள பேர்ண் தாநிலத்தில் புறூட்டோர்வ் என்னும் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு 04.05.1999ல் எமது சபையில் திருமணம் நடந்தது. எமது இனிய இல்வாழ்க்கையில் வருடங்களாகியும் எமக்கு பிள்ளை ஒன்றும் கிடைக்கவில்லை. திருமணம் ஆன 10வது மாதமே கையில் குழந்தையை எதிபார்க்கும் எமது சமூகத்தின் கேள்விக்கும்,கேலிக்கும் நாமும் ஆளானோம்.எமது இருவரினதும் பெற்றோர்களுக்கும், சகோதரர்களக்கம் எமக்கு ஒரு குழந்தை கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும், ஆவலும் மேல் எழுந்தது.

இவ்வேளையில் தான் 2000ஆண்டு மார்கழி மாதம் இடம் பெற்ற சபை ஆராதனையில் எமது ஆண்டவர் எமது சபைத் தலைவரின் ஊடாக பேசினார்.நாங்கள் எதிர் பார்த்திருக்கும் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கட்டளை இடுவதாக.அதன் பின்பு 2 மாதங்களின் பின்பு கர்த்தரின் கிருபையால் ஜெனிசன் என்னம் கரு எனது கர்ப்பத்தில் உருவாகியது. எமது இனிய இல்வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியும்,சந்தோஷமும் பொங்கியது.பிள்ளையின் பிறப்பை எதிர் பார்த்து ஆவலாய் காத்திருந்தோம்.ஒவ்வொரு மாதமும் வைத்திய பரிசோதனைக்கச் செல்லும் போதும் எந்தப் பிரச்சனையம் இல்லை குழந்தை சாதாரணமாகவே பிறக்கம் என்று சொன்னார்கள்.

ஆனாலும்  குழந்தை பிறப்பதற்கு இரண்டு மாதம் இருக்கும் போது ஒரு ஞாயிற்க்கிழமை 02.09.2001 இரவு எட்டு மணியளவில் எனக்க தாங்கவே முடியாத வயிற்றுவலி ஏற்பட்டது.உடனே எமது புறூட்டோர்வ் பகுதி வைத்தியசாலைக்குச் சென்றோம்.அங்கு பதிவு செய்வதற்கு காத்திருக்கம் படி கூறினார்கள்.என்னால் இருக்கவே முடியவில்லை.என்னால் தாங்கமுடியாது என்று கூறினேன்.உடனே பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள்.தாதியின் முகம் மாறியது.ஒரே பரபரப்பு உடனடியாக எனக்கு செயற்கைச் சுவாசமும் மயக்க மருந்தும் தரப்பட்டது.நான் மயக்கமடைந்து செல்லும்போது எல்லா வைத்தியர்களும் பச்சை நிற உடையில் என்னைந் சுழ்ந்து பரபரப்பாக செயல்படுகிறார்கள்.வைத்தியர்கள் சொன்னார்கள் தொப்புள் கொடி அறுந்து விட்டது,பிள்ளைக்கு சுவாசம் போகவில்லை பிள்ளையை குறித்து சொல்ல முடியாது.உடனே சத்திரசிகிச்சை செய்து தாயை காப்பாற்றித் தருகிறோம் என்று. அதன் படி உடனடியாக அவசர சத்திரசிகிச்சை செய்தார்கள்.இரவு 9.16 மணியளவில் பிள்ளையை எடுத்தார்கள். உடனடியாக பிள்ளைக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது. ஹெலிகொப்டர் மூலம் பேர்ணிலுள்ள  குழந்தைகள் விசேட பரிவு வைத்தியசாலைக்கு கொண்டு போனார்கள்.48 மணி நேரத்திற்க குழந்தையை குறித்து எதுவும் சொல்ல முடியாது என்று சொன்னார்கள்.

எமது சபை பிள்ளைகளுக்கு எல்லாம் தொலைபேசி மூலம் சொன்னோம்.அவர்கள் ஆறுதல் சொன்னார்கள் விடியற்காலை 03 மணிக்கு வைத்தியசாலையின் தாதி வந்து சொன்னார்கள் குழந்தையை குறித்துக் கவலைப்படவேண்டாம்என்று.அதன் பின்பு 1 நாள் அதி விசேட பிரிவிலும் 5 நாட்கள் விசேட பிரிவிலும் வைத்து கண்காணித்தார்கள். செயற்கை சுவாசமும் பாலும் வயர் மூலம் மூக்கினால் கொடுக்கப்பட்டது. குழந்தை பிறந்த போது 1கிலோ 650 கிராம் மட்டும் இருந்தது. தலையில் தலைமுடி ஒரு சிலது மட்டும் இருந்தது.

6 வது நாள் குழந்தை சாதாரண சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டது நாம் சென்று பார்த்து விட்டு  வரலாம்.ஆனால் தங்கி இருந்து பார்க்கமுடியாது.அத்துடன் எம்மிடம் குழந்தையை தருவதென்றால் அவர் தானாக சுவாசிக்க வேண்டும்.தானாக பால் குடிக்க வேண்டும். எதுவும் கருவியின் உதவியில்லாமல் செய்ய இன்னும் 2 அல்லது 3 மாதம் கூடச் செல்லலாம்.என்று சொன்னார்கள். ஆனாலும் மிக விரைவில் குழந்தை கருவிகள் எதுவும் இன்றி எல்லாம் செய்ததால் 27ம் நாள் குழந்தையை எம்மிடம் தந்தார்கள் கர்ப்பத்திலே ஜெனிசன் என்ற கருவை கர்த்தர் உண்டாக்கி, அக்கருவை குழந்தை வடிவாக அழகாக உருவாக்கி உயிரோடே எம் கரங்களில் கர்ப்பத்தின் கனியாக கொடுத்த தேவனுக்கு நன்றியள்ள இருதயத்தோடு ஸ்தோத்தரிக்கிறோம்.ஆமென்!

 

செல்வம்.தனம்.ஜெனிசன்,

Switzerland

NLM 2008