புதிய இருதயம் தேவை !

இதயம் நொருங்குண்டவர்களைக் குணமாக்ககிறார். அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். {சங் 147:3}

நொருங்குண்ட இருதயம் என்றால் என்ன? எம்முடைய பதில்களோ பல தரப்பட்டதாயும், பல வடிவமுள்ளதாயும் இருக்கலாம். எம் சமுதாயங்களில் பல விதமான காரியங்களைக் காண்கிறோம். சில வேளைகளில் புறக்கணிக்கப்பட்ட ஒரு நிலை" அந்தப் பெண்ணின் கணவனோ, அவளோடு அன்பாகத் தான. இருந்தான். ஒரு காலம் அவளுடைய ஜீவியத்தில் அன்பு காட்டி, அக்கறையாகத் தான. இருந்தான். ஆயினும் இப்பொழுதெல்லாம் இன்னொருபெண்ணுடன், தன் பங்கை உரிமை பாராட்ட தீர்மானித்து விட்டான். ஃ அந்நப் பெண்ணின் இருதயம் நொருங்கியது. ஆயினும் உள்ளான இருதயத்தில் அவள் இன்னும், தன் கணவனை நேசிக்கிறாள்.இதனால் அவளுடைய இருதயம் குணப்படாமல் காயங்களோடு தான் இருக்கிறது' நண்பர்கள. இருவர் ஒருவரை ஒருவர் கட்டி எழுப்புகிறனர். இருதயங்கள் ஒன்றாக பின்னப்படுகின்றன. ஆயினும் புயல் ஒன்று வீசியதால்  இவர்களுக்கள், பிரிவு உண்டானது. ஒரு இருதயமோ உறவை மீட்க அரும்பெரும் பாடுபடுகிறது. ஆயினும் உறவு மீட்கப் படாத பட்சத்தில் அவ் இருதயமோ நொருங்குண்டது. இதைவிட நொருங்குண்ட இருதயங்களோடு,கணவன்மார், மனைவிமார், சகோதரர்,பெற்றோர், பிள்ளைகள், தம் அன்பானவர்களை,வெட்டப்பட்ட கிடங்குகளில் இறக்கி, மண்ணால் மூடி "மண்ணோடு மண்ணாயும்,சாம்பலோடு சாம்பலாயும்' என்று சொல்லப்பட்ட, கடைசி வார்த்தைகளோடு வீடு திரும்புவதை நாம் காணலாம்.

இதைவிட எத்தனை குடும்பங்கள் இதயம் நொருங்குண்டவர்களாய் , எதிர் பாராமல் தம்மவர்களை இழந்து , தவிப்போடும், துக்கத்தோடும், ஜீவிக்கின்றனர். ஃஎம் அன்பு நேசர் இவர்களை நோக்கி "வருத்தப்பட்டு பாரம் சுமக்கிற நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப் பாறுதல் தருவேன்' என்கிறார்.

ஃஅவர் இருதயங்களை குணமாக்குகிறவராயும், காயங்களை கட்டுகிறவராயும், இன்று உங்கள் அருகில் தம்முடைய ஆணி பாய்ந்த கரங்களோடு கூடவும், அணைக்கும் படியாய் நிற்கிறார்,

எந்தத் துக்கங்களும்,எந்த சோக எண்ணங்களும், எங்களுக்குள் அடங்கிப் போக விடாதீர்கள். உங்கள் பிதா உங்களைக் குணமாக்க இடம் கொடுப்பின் நொருங்குண்ட இருதயம் குணமாகும். காயப்பட்ட இடங்கள் பூரணமாய் சொஸ்தமாகி விடும். நீங்கள் மறுபடியும் ஆரோக்கியம் உள்ளவர்களாய், கிறிஸ்துவிற்குள் தளைப்பீர்கள். இதுவரை பார்த்த மனுஷீக துக்கங்களோ பூமியில் உள்ளவர்களின்  நொருங்குண்ட இருதயங்களாய் இருக்கிறது. நாம் இப்பூமியில் பிறந்த பின்னர், எம் வாழ்வில் குறுக்கிட்ட சம்பவங்களால் ஏற்பட்ட காரியங்களைப் பற்றி சிறிது சிந்தித்தும், அவற்றிற்கு வேதம் கொடுக்கும் பரிகாரங்களையும் கண்டோம்.

 

அன்பானவர்களே, இன்னொரு "நொருங்குண்ட இருதயம் உண்டு' ஒரு இருதயமானது பரிசுத்த ஆவியானவரால், பாவத்தில் இருந்து வேறு பிரிந்து வாழும்படி நொருக்கப்பட்டு: இரட்சிப்பின் பூரணத்தைப் பெற்று, பரலோகத்தின் நிச்சயத்தைச் சுதந்தரிகுமே ஆயின் , அவ் இருதயம்  நொருக்கப்பட்ட நிலையிலேயே, குணமாக்குதலை பெற்றுக் கொள்கிறது. இந்த உண்மை உங்கள் ஜீவியத்தில் நிலை கொண்டுள்ளதா?  இங்கு எங்களுக்கு, ஒரு எச்சரிப்பு ஒன்று உண்டு." மாமிசத்தின் இச்சையால்' எம்முடைய மாமிசமும், எங்களுடைய சிந்தையும், கற்பனைகளும் இழுப்புண்டு போகுமேயாயின், உங்களுடைய இரட்சிப்பின் நாட்களை நினைவு கூருங்கள்! அந் நாட்களில் உண்மையாயே மனம் திரும்பினீர்களா? அப்படி இல்லையேல் சேற்றில் வாழும் பன்றிகளைர் போல எம் வாழ்க்கை துர் நாற்றம் எடுக்கும். நாம் தட்டில் போட்டு, சுவையான கறிகளுடன் பரிமாறினும், சோற்றைப் பார்த்து அடிப் பானையில் சோறு இல்லையா என சிலர் கேட்பார்கள்' ஃ மனம் திரும்பி குணப்படாத இருதயங்களைக் கர்த்தர் காயம் கட்டுவதில்லை.

ஏனெனில் மனம் திரும்புதலை ஆவியானவரே அருளுகிறார்.ஆயினும் குணப்பட எமக்கு இஷ்டமில்லையேல், நாம் எம்மை தேவனின் நியாயத் தீர்ப்பிற்குக் கொண்டு வருகிறோம். கிறிஸ்துவின் அளவற்ற அன்பும், இரக்கமும், எல்லோருடைய, எப்பேற்பட்ட, காரியங்களையும்  ஆற்ற வல்லதாய் இருக்கிறது.ஃ மனம் திரும்பி குணப்படுவோமாக! குணப்படாத இருதயமோ, கர்த்தருக்கு முன்பதாய் கடினமானதாய் இருக்கிறது.மன்னித்தும் அதிலிருந்து நொருங்குண்ட இருதயம்மோ, கர்த்தரின் நியாயத் தீர்ப்பை வேண்டி நிற்கிறது. ஏனெனில் மனம் திரும்புதல் ஏற்படாமல், போவதற்கு பொறாமையே காரணமாகிவிடுகிறது. ஃவேதம் சொல்லுகிறது "பெருமை உள்ளவர்களை கர்த்தர் எதிர்த்து நிற்கிறார். ஆனால் தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.' ஃஎம்முடைய  இருதயத்தைச் சோதிப்போம். அது எப்படிப்பட்டதாய் இருக்கிறது? எமக்குள் ஒரு புதிய இருதயம் சிருஸ்டிக்கப்பட வேண்டிய அவசியம் உண்டு. ஏனெனில் தேவனுக்கு முன்பதாய், நொருங்குண்ட இருதயம் உள்ளவர்களே, அவருடைய அந்த "மெல்லிய சத்தத்தைக் கேட்க முடியும். எலியா கர்த்தர், தனக்கு முன்பாக பர்வதத்தில் நிற்கும் படி சொன்னபோது, பலத்த பெருங்காற்று அடித்தது, பின்னர் பூமி அதிர்ச்சிகூட உண்டாயிற்று. ஆயினும் அவற்றில் எல்லாம் கர்த்தர் இருக்கவில்லை. அக்கினிக்குப் பின் அமர்ந்த மெல்லிய சத்தத்துடன் தேவன் பேசினார். புடமிடுவதற்கு தாக்குப் படிக்காத உலோகம் பொன்னுமல்ல, மனம் திரும்பாத இருதயம் நொருங்குண்டதும் அல்ல. நொருங்குண்ட இருதயத்தோடு தான்.கர்த்தர் தன் இருதயத்தை இணைப்பார்.அவர் மன்னியாத தேவன் எனின் எம் பாவத்தை உணர்த்தாரே!

அவர் காயங்களைக் கட்டப் போவதில்லை எனின், எம் காயங்கள் கணக்கெடாரே! எம் இருதயங்கள் அவருக்கு முன்பதாய் நொருங்குண்டு. அவரை நோக்கும் போது அவர் குணமாக்கார் எனின், அவர் சிலுவைக்கு ஒப்புக் கொடுத்திராரே!

உண்மை, உண்மை, மெய்யாகவே உண்மை, என்னவெனில்"மெய்யான மனம் திரும்புதலை, பரிசுத்த ஆவியானவர் உங்களிற்கு கொடுத்திருப்பின்,நீங்கள் இனி பாவத்தை சந்தோஷமாய் நாடாமல், அதை வெறுத்து, இரட்சிப்பின் பூரணத்தினுள், பிரவேசிக்க,மெய்யாயே மனம் திரும்பியிருப்பீர்கள். இல்லையேல்" வீண் பெருமை அடங்காமை, கீழ்ப்படிவின்மை,"நான்' என்ற பெருமைப் பேச்சு, என்னைக் கவனிப்பார் இல்லை என்ற தன்னிரக்கத்தின் வஞசகம், வாதாட்டம், என்னை கவனியுங்கள் என்று வெளிக்கோலம்,' இப்படியாக அனேக தந்திரங்களின் பின்னலில் அநேகர் சிக்கி விட சந்தர்ப்பம் உண்டு. அவர் அடிக்கப்பட்ட ஒவ்வொரு சவுக்கின் கிருபையையும்,அவர் பட்டஒவ்வொரு காயமும், எமக்காய் பெருகிய இரக்கமுமே ஆகும்.

ஃஇன்று உன்னை நிறுத்தி சிந்தி. அவர் நொருங்குண்ட இருதயங்களைக் குணமாக்கி, அவர்களைக் காயம் கட்டுகிறார், அவர் முன்பதாய் நொருங்குண்டவர்களாய் இறங்கி வாருங்கள்!

"அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான, தேவ சமதானம் உங்கள் இருதயங்களையும், உங்கள் சிந்தையையும், கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்' {பிலிப் 4:7}

 

NLM 2007