|
கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தும் ஆலோசனைகள்! ******** 1.உங்களையல்ல, கிறிஸ்துவையே உயர்த்துங்கள்.வசனங்களை வெறுமனே கேள்விப்பட்டதிலிருந்து சொல்லாமல் வேதத்தில் இருந்து எடுத்துக்காட்டுங்கள். 2.திருவசனங்களை அவசரப்படாமல் நிதானமாக விளக்குங்கள். 3.பாவங்களை அளவுக்கு மீறி விளக்கிக் கொண்டே போவதை தவிருங்கள். 4.ஒரேயடியாக எல்லாக் குறிப்புகளையும் சொல்லி விடாதேயுங்கள். 5.உங்கள் சொந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தாமல் வேதம் கூறுவதையே சொல்லுங்கள். 6.மையப் பொருளைவிட்டு தேவையற்ற விவாதங்களுக்குள் நுழையாதீர்கள்.உங்கள் கருத்துக்களை மாத்திரம் நீங்களே பேசிக்கொண்டிருக்காமல், உங்களுடன் உரையாடும் நபரையும் கதைக்க அனுமதியுங்கள். அவரது சந்தேகங்கள், கேள்விகளுக்கு வேதத்தின் உதவியுடன் பதிலளியுங்கள். 7.தனித்து ஒருவருடன் உரையாட வேண்டுமாயின் மற்றவர்கள் சுற்றியிருக்கும் சூழலைத் தவிருங்கள். எதற்கும் சாட்சியுடன் செயல்படுவது அவசியம்.நீங்கள் தேவனால் சந்திக்கப்பட்ட விதத்திலேயே அனைவரும் சந்திக்கப்படுவார்கள் என்ற சிந்தையுடன் செயல்படாதீர்கள். 8.சபைகளின் நிலை,கொள்கை வேறுபாடு ஆகியவற்றைப் பற்றி கலந்துரையாடாமல் தேவனின் அன்பை வெளிப்படுத்துவதில் கவனத்தை செலுத்துங்கள். 9.ஆணாக இருந்தால் ஆண்களோடும், பெண்ணாக இருந்தால் பெண்களோடும்,பேசுவது வரவேற்கத்தக்கது. 10.பண்பாட்டையும் பெருந்தன்மையும் மறக்காதீர்கள். 11.புரிந்து கொள்ள சிரமப்படுவர்களிடம் பொறுமையை இழக்காதீர்கள். 12.ஒரு போதும் சோர்ந்து போகாதீர்கள்.உத்தமமாய் உழைத்த பின்பு விளைவைத் தேவனிடத்தில் விட்டுவிடுங்கள்.
|
NLM2009