|
Halloween கலோவின்
இந்த இரவில் இவர்கள் பல வித உடையணிந்து நடனமாடுவார்கள். செயற்கையான மிருகங்களின் தலைகளைப் போட்டும், மந்திரவாதி சூனியக்காரி போல வேடம் பூண்டும், பேய்கள் பூதந்கள் போல முகமூடிகளைப் போட்டுக் கொண்டும். தெருத்தெருவாக வீடுவீடாக வந்து தமது கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பார்கள். எச்சரிக்கையாய் இருங்கள். இவர்களின் கொண்டாட்டம் பார்வைக்கு கவர்ச்சியாய் இருப்பினும்முடிவு அந்தோ பரிதாபம்.கலோவின் என்பதன் பொருள் சந்தோஷத்தைக் கொண்டாடுதல். இந்தப் பெயரையும் பெயரின் அர்த்தத்தையும் புரிந்து கொண்ட பலர் தமது அறியாமையினால் இதற்குள் விழுந்து போய் ஏதோ சந்தோஷத்தைக் கொண்டாடுவதாக எண்ணி எமாறுகிறார்கள். "Dady<can we gotirck-or-treating?": "டாடீ, றிக் ஒறீற்ரிக் போவோமா?" எனத் தகப்பனிடம் மகன் கேட்கும் போது, போக வேண்டாம் எனத் தடுக்க முடியாமல் தாயும்,தகப்பனும் திணருகின்றனர்,கலோவின் கொண்டாட்டத்தை"றிக் ஓ றீற்ரிங்"எனப் பிள்ளைகள் கூறுவர்.இச்சொல்லிலேயே கவர்ச்சி இருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். இக் கொண்டாட்டத்திற்குப் போனால் அங்கு பல வகையான தின்பண்டங்களும்,இனிப்பு, சாக்கிலேட்,சூயிங்கம்,போன்றவைகளும் நிறையக் கிடைக்கும் எனப் பிள்ளைகள் அறிந்திருப்பதால், தாம் எப்படியும் "றிக் ஓ றீற்ரிங்"ற்குப் போய்த் தீர வேண்டும் என அடம்பிடிக்கின்றனர்.பெற்றோர்களே எச்சரிக்கையாய் இருங்கள். "றிக் ஓ றீற்ரிங் போன்ற களியாட்டிற்கு போகாதபடி எப்படி எமது பிள்ளைகளை தடுக்கலாம் என நீங்கள் எண்ணுகிறீர்கள். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் திராட்சைப்பழ அறுப்பு நாட்களில் புறஜாதியார்" செக்ஸ்நுவலஜ ணுறியன்ரட்" (sexuallyoriented) என்னும் கவர்ச்சி கரமான பண்டிகையை மதுபானம் அருந்தி வெறித்து கூத்தாடுவார்கள்.தமது வைன் தேவனுக்காக (gods of wine)கொண்டாடுவார்கள். இக் கொண்டாட்டம் .இஸ்ரவேலரைத் தாக்காத படிக்கு தேவனாகிய கர்த்தர் தாமே கூடாரப் பண்டிகை என்னும் கொண்டாட்டத்தைக் கொண்டாடும்படி இஸ்ரவேலரைப் பணித்தார்.இக் கூடாரப் பண்டிகை அதிக வேலைப்பாடு அடங்கியதினால் இஸ்ரவேலர் இந்நாட்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இப்படித்தான் புறஜாதியாருடைய களியாட்டுக்கள் இஸ்ரவேலைத்தாக்காத படிக்கு (இடறல் வராதபடிக்கு)தேவன் வழி நடத்தினார். இதே போல உங்களுடைய சபையிலும் சிறுவரையும்: வாலிபப்பிராயத்தில் உள்ளவர்களையும் சந்தோஷத்தை தரக் கூடிய பரபரப்பான காரியங்களை நடத்துவதினால் அவர்களுடைய கவனத்தை தேவனை மகிமைப்படுத்தும் வழியில் மாற்றி விடலாம். கலோவின் கொண்டாடுவோர் தமது பிதாவாகிய சாத்தானின்வேடம் பனைந்து ஆடுகின்றனர். நாமோ இராயாதிராஜாவின் பிள்ளைகள்.எமது கொண்டாட்டஙகள் எமது பரம பிதாவை பிரதி பலிப்பதாக இருக்கட்டும். இப்படியான வேளைகளில் பிள்ளைகளுக்குச் சலிப்புத்தரக் கூடிய ஆராதனைகளை வைக்காமல், தேவ வார்த்தையோடு கூடிய பலவித புதிய காரியங்களை செய்வது நல்லது. நமது தேவன் சலிப்பானவர் அல்லவே. அவர்கள் சூனியக்கார் வேடம் போடுகின்றனர், நாமோ ராஜா வேடம் போடுவோம். "நீங்களோ,உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்கனை அறிவிக்கும் படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும்,இராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியுமாயும், அவருக்கு சொந்த ஜனமாயும் இருக்கிறீர்கள்" (1பேதுரு 2:9) |
NLM2008